தேசிய செய்திகள்

அமேசான், அலிபாபா பாணியில் சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் - நிதின் கட்காரி தகவல் + "||" + Separate website for selling small business products - Nitin Gadkari Information

அமேசான், அலிபாபா பாணியில் சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் - நிதின் கட்காரி தகவல்

அமேசான், அலிபாபா பாணியில் சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் -  நிதின் கட்காரி தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுடெல்லி, 

வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு, குறு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய துறையை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்காக இன்னும் ஒரு மாத காலத்தில் தனி இணையதளம் தொடங்கப்படும்.

இதுதொடர்பாக அரசு மின்னணு சந்தையிடமும், மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலிடமும் பேசிவிட்டேன். அமெரிக்காவில் உள்ள அமேசான், சீனாவின் வளர்ச்சிக்கு உதவிய அலிபாபா போன்று இந்த இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, சிறு, குறு தொழில்துறைக்கு நல்ல வாய்ப்பு. அத்துறைக்கு வங்கிகள் வழங்கும் கடன் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுங்க கட்டண அட்டை ஒட்டாமல் சுங்கச்சாவடி ‘பாஸ்டாக்’ வழியில் சென்றால் 2 மடங்கு கட்டணம் - நிதின் கட்காரி
சுங்க கட்டண அட்டை ஒட்டாமல் சுங்கச்சாவடி ‘பாஸ்டாக்’ வழியில் சென்றால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
2. பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - நிதின் கட்காரி பேட்டி
பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
3. வாகனங்களுக்கான ஆதார் போன்றது பாஸ்டேக் -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
வாகனங்களை ட்ராக் செய்யும் ஆதார் போன்று பாஸ்டேக் செயல்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
4. நிதின் கட்காரியுடன் நடிகர் சஞ்சய் தத் திடீர் சந்திப்பு
நிதின் கட்காரியை நடிகர் சஞ்சய் தத் திடீரென சந்தித்து பேசினார்.
5. பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: நிதின் கட்காரி
பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.