வேலையிழப்பு விவகாரத்தில் பாஜக அரசு அமைதி காப்பது ஆபத்தானது: பிரியங்கா காந்தி


வேலையிழப்பு விவகாரத்தில் பாஜக அரசு அமைதி காப்பது ஆபத்தானது: பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 26 July 2019 7:47 AM GMT (Updated: 26 July 2019 10:03 AM GMT)

வேலையிழப்பு விவகாரத்தில் பாஜக அரசு அமைதி காப்பது ஆபத்தானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் துறையில் மந்த நிலை நீடித்தால், 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்  தலைவர் நேற்று பேட்டி அளித்து இருந்தார். பத்திரிகைகளில் இந்த செய்திகளை மேற்கோள் காட்டியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த விவகாரத்தில் பாஜக மவுனம் காப்பது ஆபத்தானது என்று சாடியுள்ளார்.

இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தமான போக்கால் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைபறிபோகும் நிலை இருப்பது ஆபத்தான போக்காகும்.

இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் புதிய வேலையைப் பல்வேறு துறைகளில் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால்,  தொழிலாளர்கள் வேலையிழப்பு, பலவீனமான வர்த்தகம்,  மற்றும்  பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கைகள் ஆகியவற்றை  பார்த்து பாஜக அரசு மவுனமாக இருப்பது ஆபத்தான போக்காகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story