ஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்


ஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்
x
தினத்தந்தி 26 July 2019 8:29 AM GMT (Updated: 26 July 2019 8:29 AM GMT)

ஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் விழாவொன்றில் பசுவின் பால் மற்றும் சிறுநீரின் மகத்துவம் தொடர்பாக திரிவேந்திர சிங் ராவத் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், பசுக்கள் ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதை வெளியேற்றுகிறது. பசுவை மசாஜ் செய்வது சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும், அதே சமயம் விலங்குடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயை குணப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். அவருடைய அப்பேச்சை அம்மாநில முதல்வர் அலுவலகமும் ஆதரித்துள்ளது. உத்தரகாண்ட் மலைப்பகுதிகளில் இது ஒரு பொதுவான நம்பிக்கையாக உள்ளது, இதனை குறிப்பிட்டே முதல்வர் பேசியுள்ளார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story