கும்பல் தாக்குதல், மத்திய, மாநில அரசுகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கும்பல் தாக்குதல், மத்திய, மாநில அரசுகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 July 2019 1:50 PM GMT (Updated: 26 July 2019 1:50 PM GMT)

கும்பல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ந்தியா முழுவதும் ஆங்காங்கே கடந்த ஆண்டு பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணை மேற்கொண்ட போது, இவை கொடூரமான செயல்கள் என்று கண்டனம் தெரிவித்தது.  பசு பாதுகாவலர்களுக்கு கடிவாளமிட மாவட்டம் தோறும் அதிகாரிகளை நியமனம் செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் இதுபோன்ற கும்பல் தாக்குதல் தொடர்ந்துதான் வருகிறது. பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சிபோக ஸ்ரீராம ஜெயம் சொல்ல சொல்லியும் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பலதரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தது. கும்பல் தாக்குதலை ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக்கவும், கடுமையான தண்டனையை வழங்கும் விதமாகும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உத்தரவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய, மாநில அரசுக்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

Next Story