மக்களவையில் 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல்


மக்களவையில் 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 26 July 2019 8:30 PM GMT (Updated: 26 July 2019 8:12 PM GMT)

மக்களவையில் 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தார். தவறான சிகிச்சை அளித்ததாக கூறி நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவதை தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதைப்போல நாட்டில் இருந்து மரண தண்டனையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவை தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார். மேலும் கருணைக்கொலையை ஒழுங்குபடுத்த வகை செய்யும் மசோதா ஒன்றை பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருகாரி மக்தாப் தாக்கல் செய்தார்.

ஜனார்தன் சிங் சிக்ரிவால் தாக்கல் செய்த கட்டாய ஓட்டளிப்பு மசோதாவுக்கு உறுப்பினர்கள் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதைத்தவிர ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது, போலி செய்திகளை தடுப்பது போன்ற மசோதாக்களும் எம்.பி.க்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.


Next Story