ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மீது முன்னாள் மாணவர் கடும் தாக்குதல்


ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மீது முன்னாள் மாணவர் கடும் தாக்குதல்
x
தினத்தந்தி 27 July 2019 5:30 AM GMT (Updated: 27 July 2019 5:30 AM GMT)

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மீது முன்னாள் மாணவர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் பிரபல ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வங்காள துறை பேராசிரியராக இருப்பவர் அப்துல் காஃபி.  இவர் பல்கலைக்கழகத்தின் முன்வாசல் அருகே தேநீர் அருந்தியபொழுது திடீர் என அங்கு வந்த நபரொருவர் அவரை தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் கீழே விழுந்த அவரை மற்ற மாணவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர்.  இந்த தாக்குதலில் முன்னாள் மாணவர் ராஜேஷ் சான்ட்ரா என்பவர் ஈடுபட்டுள்ளார்.  ஹூக்ளி நகரின் ஆரம்பாக் பகுதியை சேர்ந்த அவர், பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் படித்துள்ளார்.

காஃபிரிடம் படித்தபொழுது, தனக்கு எதிராக அவர் வேற்றுமையுடன் நடந்து கொண்டார் என ராஜேஷ் கூறியுள்ளார்.  காஃபிரை பல நாட்களாக பின்தொடர்ந்து சென்ற ராஜேஷ் இறுதியில் இதுபோன்ற தாக்குதலை நடத்தியுள்ளார்.  ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story