பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது - குமாரசாமி


பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது -  குமாரசாமி
x
தினத்தந்தி 27 July 2019 4:05 PM GMT (Updated: 27 July 2019 4:05 PM GMT)

பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது.  மஜத எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவி சாய்க்க தேவையில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story