கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் - தேவேகவுடா பேட்டி


கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் - தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 28 July 2019 10:45 PM GMT (Updated: 28 July 2019 10:14 PM GMT)

கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். ஏற்கனவே சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மும்பையில் உள்ள தலைவர்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) நாளை (அதாவது இன்று) பெங்களூரு வருகிறார்கள். அவர்கள் என்னையும், குமாரசாமியையும் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தான் என்னிடம் பேசி காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியை அமைத்தனர். இப்போது அவர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம். கூட்டணி விஷயத்தில் காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அக்கட்சியின் முடிவை பொறுத்து நாங்கள் அடுத்தகட்ட முடிவு எடுப்போம். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story