ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா நாளை ஆலோசனை


ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா நாளை ஆலோசனை
x

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ஆகியோர், ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு தேர்தலை எதிர்கொள்ள பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில்  நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதில், தேர்தலை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது குறித்தும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.


Next Story