தேசிய செய்திகள்

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்தில் சிக்கிய விவகாரம்: இருவர் கைது + "||" + Unnao Rape Survivor Injured In Crash With Truck That Had Number Wiped

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்தில் சிக்கிய விவகாரம்: இருவர் கைது

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்தில் சிக்கிய விவகாரம்:  இருவர் கைது
பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உன்னோவ், 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் பாலாத்காரம் செய்ததாக அப்பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகல்  1 மணியளவில்  அப்பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் ஒரு உறவினருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தார்.  மழை பெய்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அவர்கள் சென்ற கார் மீது லாரி ஒன்று பயங்கரமாக  மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். 

இந்த விபத்து உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய லாரியின் எண் பலகை கருப்பு நிறம் பூசி மறைக்கப்பட்டு இருந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட பெண் கைது ; இது தான் பாஜக நீதியா? -பிரியங்கா காந்தி ஆவேசம்
சின்மயானந்தா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை பணப்பறிப்பு வழக்கில் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, இது தான் பாஜக நீதியா? என மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார்.
2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ஒருவர் டி.வி. பேட்டியில் பரபரப்பு புகார் கூறினார்.