கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று ஆலோசனை


கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று  ஆலோசனை
x
தினத்தந்தி 29 July 2019 5:22 AM GMT (Updated: 29 July 2019 5:22 AM GMT)

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று  ஆலோசனை  நடத்தினார். கர்நாடக காங். கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ், எம்.பி. பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே ஆர் ​​ரமேஷ் குமார் நேற்று உத்தரவிட்டார். எனவே, தகுதி நீக்கம் செய்த அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக  14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கே.ஆர்.​​ரமேஷ் குமார் எடுத்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வரவேற்றுள்ளார். 

சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். சபாநாயகரின் இந்த நேர்மையான முடிவு பாஜகவின் வலையில் விழக்கூடிய நாட்டின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வலுவான சமிக்ஞைகளை அனுப்பும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே, தகுதி நீக்கங்களுக்குப் பிறகு அதிருப்தியாளர்கள் யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா என்று நிருபர்கள் கேட்டபோது சித்தராமையா கூறுகையில், "அவர்களில் இருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள், ஆனால் நான் அவர்களிடம் பேசவில்லை. நான் பழைய பிரச்சினையைப் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை " என்றார்.

Next Story