விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆக.2-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு + "||" + SC to hear on Friday Vijay Mallya's plea challenging confiscation of his and his relatives' properties.
விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆக.2-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆக.2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விஜய் மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை தவிர்த்து வேறு எந்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யக்கூடாது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த மனு ஆகஸ்ட் 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.