இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக சீனிவாஸ் நியமனம்


இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக சீனிவாஸ் நியமனம்
x
தினத்தந்தி 29 July 2019 3:23 PM GMT (Updated: 29 July 2019 3:23 PM GMT)

இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக சீனிவாஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்து விட்டார். இந்நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராகுல் காந்தியே அப்பதவியில் தொடரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில், இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக பி.வி. சீனிவாஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் நியமித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கடந்த 2018ம் ஆண்டு மே 11ந்தேதியில் இருந்து இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக கேசவ் சந்த் யாதவ் பதவியில் நீடித்து வந்த நிலையில், இந்திய இளைஞர் காங்கிரசின் துணை தலைவராக செயல்பட்டு வந்த சீனிவாஸ் அந்த பதவிக்கு இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Next Story