‘அக்காவிடம் பேசுங்கள்’ திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுக்கிறார் மம்தா பானர்ஜி


‘அக்காவிடம் பேசுங்கள்’ திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுக்கிறார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 30 July 2019 1:06 PM GMT (Updated: 30 July 2019 1:06 PM GMT)

மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘அக்காவிடம் பேசுங்கள்’ என திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரத்தை மம்தா பானர்ஜி முன்னெடுக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜனதா கடுமையான நெருக்கடி கொடுத்தது. பா.ஜனதா 18 தொகுதிகளை வென்றது. 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 22 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது திரிணாமுல் காங்கிரஸ் 12 தொகுதிகளை இழந்தது. மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தல் நடக்க உள்ளது.  இதனையடுத்து அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மேற்குவங்க தேர்தல் ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார். தேர்தலுக்கான பிரசாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். 

‘அக்காவிடம் பேசுங்கள்’ என பொதுமக்களிடம் குறைகளை கேட்கும்  வகையில் திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரத்தை மம்தா பானர்ஜி முன்னெடுக்கிறார்.  பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்பதற்காக 1000 திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அடுத்த 100 நாட்கள் கிராமங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைகளை கேட்கிறார்கள். யார் எங்கு செல்வது என்பது தொடர்பாக கட்சி முடிவு செய்யும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுபோன்று குறைகளை தீர்க்கும் வகையில் கட்சியின் தரப்பில் இலவச உதவி எண் மற்றும் இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story