வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் தேவை - காங்கிரஸ் எம்.பி.


வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் தேவை - காங்கிரஸ் எம்.பி.
x
தினத்தந்தி 30 July 2019 8:15 PM GMT (Updated: 30 July 2019 7:42 PM GMT)

வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் தேவை என காங்கிரஸ் எம்.பி.யான பி.எல். புனியா கூறினார்.

புதுடெல்லி,

ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் விடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முதன்முதலாக குரல் கொடுத்துள்ளது.

இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யான பி.எல். புனியா நேற்று எழுப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, “வாக்காளர் பட்டியலில் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் பெயர்கள் ஏராளமாக காணாமல் போகின்றன அல்லது நீக்கப்பட்டு விடுகின்றன. ஊராட்சி, சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு தனித்தனியாக வாக்காளர்கள் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது. நிரந்தர வாக்காளர்கள் பட்டியல் வேண்டும். ஒரு வாக்காளர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயருகிறபோது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிய இடத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

அத்துடன், “வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் நிரந்தரமாக சேர்க்கப்பட வேண்டும். அதை நீக்கி விடக்கூடாது. தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய தருணம் இது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story