சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 31 July 2019 2:09 PM GMT (Updated: 31 July 2019 2:09 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-ல் இருந்து 34 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் அதிகரிப்பால், தலைமை நீதிபதி உள்பட  நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ல் இருந்து 34 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  தெரிவித்துள்ளார். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் 31 நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.  சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம் 1956-க்கு பின்னர் கடைசியாக 2009 -ல் திருத்தப்பட்டது. நீதிபதிகளின் எண்ணிக்கையை 25-ல் இருந்து 30 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்போது மீண்டும் திருத்தம் செய்யப்படுகிறது. நாடாளுமன்றம், ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயரும். 

Next Story