மோட்டார் வாகன மசோதா ஊழலை ஒழிக்கும் - நிதின் கட்காரி நம்பிக்கை


மோட்டார் வாகன மசோதா ஊழலை ஒழிக்கும் - நிதின் கட்காரி நம்பிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 6:45 PM GMT (Updated: 31 July 2019 6:16 PM GMT)

மோட்டார் வாகன மசோதா ஊழலை ஒழிக்கும் என நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மோட்டார் வாகன (திருத்தம்) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் அது தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, இந்த மசோதா ஊழலை ஒழிப்பதுடன், சாலை பாதுகாப்பை அதிகரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொழில்நுட்பங்களை வரவேற்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு பாணியில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறிய கட்காரி, மாநிலங்களவையில் இது சுமுகமாக நிறைவேறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் விபத்து பகுதிகளை கண்டறிய ரூ.14 ஆயிரம் கோடி செலவாகும் எனவும், இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1½ லட்சம் பேர் உயிரிழப்பதாக வருத்தம் தெரிவித்த கட்காரி, இதை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story