மராட்டியத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்


மராட்டியத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
x
தினத்தந்தி 1 Aug 2019 2:15 AM IST (Updated: 1 Aug 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் நேற்று இணைந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து விரைவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நவிமும்பை மாநகராட்சியின் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 52 பேர் பா.ஜனதாவில் சேர்ந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தீப் நாயக், வைபவ் பிச்சாத், சிவந்தரராஜே போஸ்லே உள்ளிட்ட 4 பேரும் நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நேற்று மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் தங்களை பா.ஜனதாவில் இணைத்து கொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சித்ராவாக்கும் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.

Next Story