வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது அசாம்
அசாமில் முக்கிய நதிகளில் வெள்ளம் குறைந்துள்ளதால், இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 12 மாவட்டங்களில் உள்ள 692 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5.18 லட்சம் மக்கள் 374 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது, அங்கு மழை குறைந்துள்ளதால், முக்கிய ஆறூகளிலும் துணை நதிகளிலும் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், நிலமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. அசாமில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 84 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
பீகாரில் வெள்ள நிலைமை இன்னும் சீராகவில்லை. இருப்பினும், வெள்ள பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Related Tags :
Next Story