டெல்லியில் 200 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் 200 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 7:36 AM GMT (Updated: 1 Aug 2019 7:36 AM GMT)

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கிடையாது என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 201 யூனிட் முதல் 400 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.  மேலும் கூறுகையில், நாட்டிலேயே மிகக்குறைந்த விலையில் டெல்லியில் தான் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், இந்த சலுகை மூலம் மின்சாரம் சேமிக்கப்படுவது ஊக்குவிக்கப்படும் என்றார். 

பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது.  டெல்லி சட்டசபைக்கு 2020-ன் துவக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். 

முன்னதாக,  மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்து இருந்தார். 

Next Story