உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்


உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 1 Aug 2019 2:00 PM IST (Updated: 1 Aug 2019 2:00 PM IST)
t-max-icont-min-icon

உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். 

இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Next Story