குஜராத்தில் கனமழையை அடுத்து தெருக்களில் படையெடுத்த முதலைகள்...!


குஜராத்தில் கனமழையை அடுத்து தெருக்களில் படையெடுத்த முதலைகள்...!
x
தினத்தந்தி 1 Aug 2019 12:05 PM GMT (Updated: 1 Aug 2019 12:05 PM GMT)

குஜராத்தில் கனமழையை அடுத்து வெள்ளம் காரணமாக தெருக்களில் முதலைகள் படையெடுத்துள்ளன.

வதோதராவில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது. மழை சற்று குறைந்துள்ள நிலையில் தெருக்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது.

விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் அபாயக்கட்டத்தை தாண்டி செல்கிறது. ஆற்றில் 260க்கும் அதிகமான முதலைகள் இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இப்போது தெருக்களில் முதலைகள் ஹாயாக சுற்றுவதை மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். 

அஜ்வா அணையிலிருந்து இந்த முதலைகள்  வெளியேறியுள்ளன. வெளியேறியுள்ள முதலைகள் தெருக்களில் சுற்றும் நாய்களை உணவாக்க முயற்சி செய்கிறது. பொதுமக்களையும் கடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.  முதலைகள் சுற்றுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் படையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story