ஓலா, உபேர் போன்ற டாக்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஓலா, உபேர் போன்ற டாக்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2019 1:24 PM GMT (Updated: 1 Aug 2019 1:24 PM GMT)

ஓலா, உபேர் போன்ற டாக்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செல்போன் செயலிகள் அடிப்படையில் இயக்கப்படும் ஓலா, உபேர் போன்ற டாக்சிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீலிடம் மேற்படி டாக்சி  நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.  அதற்கு பதிலளித்த மத்திய அரசு வக்கீல், அதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார். உடனே நீதிபதிகள் அப்படியானால் அதை செய்யுங்கள் என்றனர். மேலும் இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்குமாறு மனுதாரரையும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story