பிரியாவிடை நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்
அரியானா மாநிலத்தில் குரே ராம் என்ற ஆசிரியர் அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார்.
சண்டிகார்,
அரியானா மாநிலத்தில் குரே ராம் என்ற ஆசிரியர் அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறும் நாளில் ஹெலிகாப்டரில் வர வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்.
சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லாத அவரது மகன்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர்.
2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளியில் இருந்து குரே ராம் தன் சொந்த ஊரான சத்புரா கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார். தற்காலிக ஹெலிபேடு இருக்கும் இடத்தில் கூடிய கிராம மக்கள் அவரை மேள தாளங்களோடு உற்சாகமாக வரவேற்றனர்.
Related Tags :
Next Story