அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி - இந்திய ராணுவம்


அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி - இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 2 Aug 2019 11:12 AM GMT (Updated: 2 Aug 2019 11:12 AM GMT)

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது என இந்திய ராணுவம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளை ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்புப் படைகள் தகர்த்தெறிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் இருவழிப்பாதையில் பாகிஸ்தான் ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகுண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை இந்திய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் பாகிஸ்தான் முயற்சி வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பாதுகாப்பு படைகள் மூன்று நாட்களாக பாதைகளில் சிறப்பு சோதனையை மேற்கொண்டது. அப்போது ஆயுதங்கள், கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எல்லையில் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்படுகிறது. எல்லையில் நிலை கட்டுக்குள் உள்ளது, அமைதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறிய தாக்குதலை நடத்தியது, அதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய ராணுவம் அடைந்துள்ளது என லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் கூறியுள்ளார்.  

Next Story