குஜராத்: சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வந்த முதலைகள் - இதுவரை 7 மீட்பு


குஜராத்: சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வந்த முதலைகள் - இதுவரை 7 மீட்பு
x
தினத்தந்தி 2 Aug 2019 9:10 PM GMT (Updated: 2 Aug 2019 9:10 PM GMT)

குஜராத் வதோதரா நகரில் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வந்த 7 முதலைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஓடியது. இந்த மழை வெள்ளத்துடன் முதலைகளும் நகர சாலைகளுக்கு வந்துள்ளன. வனத்துறை அதிகாரிகளுக்கு இப்போது முதலைகளை பிடிப்பதே முக்கிய வேலையாக உள்ளது. மழையால் விஸ்வாமித்ரி ஆறு நிரம்பி வழிந்ததால் ஆற்றில் இருந்த முதலைகள் தான் நகருக்குள் வந்துள்ளன.

ஆற்றங்கரையோரம் உள்ள ராஜ்மகால் ரோடு, பதேகஞ்ச் ஆகிய பகுதிகளில் இவை உள்ளன. வியாழக்கிழமை 3 முதலைகளும், வெள்ளிக்கிழமை 4 முதலைகளும் மீட்கப்பட்டன. வனத்துறை அதிகாரி வினோத் தோமர் கூறும்போது, “விஸ்வாமித்ரி ஆற்றில் 150 முதலைகள் வரை உள்ளன. இவற்றில் சில வெள்ளத்துடன் வந்துவிட்டன. ஆற்றில் இந்த முதலைகள் 10 அடி வரை வளரக்கூடியவை. ஆனால் இதுவரை மீட்கப்பட்ட முதலைகள் 5 அடி வரை உள்ளவை. முதலைகளை பிடிக்க 6 குழுக்கள் அமைத்துள்ளோம். முதலைகள் தவிர 2 ஆமைகள், சில பாம்புகளையும் மீட்டுள்ளோம்” என்றார்.

Next Story