அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும்: 6-ந் தேதி முதல் தினசரி விசாரணை - நீதிபதிகள் உத்தரவு
சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கு வருகிற 6-ந்தேதி முதல் தினந்தோறும் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத்ததோடு அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான கோபால்சிங் விஷாரத், சமரச குழுவால் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், எனவே கோர்ட்டே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சமரச குழுவின் அறிக்கையை கோர்ட்டு ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினையை சமரச குழுவால் தீர்க்க முடியாத நிலை இருப்பதாக கருதினால், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை தினசரி விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சமரச குழு சுப்ரீம் கோர்ட்டில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதை பரிசீலித்த நீதிபதிகள், சமசர குழுவின் பேச்சுவார்த்தை தொடர்பான நிலை தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி சமரச குழுவின் நிலை தகவல் அறிக்கை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாகவும், அயோத்தி நில விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், சமரச குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப் பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை வருகிற 6-ந்தேதி முதல், வக்கீல்கள் விவாதம் முடிவடையும் வரை தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என்றும் கூறிய நீதிபதிகள், இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தயாராக இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story