சத்தீஷ்கர்: என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கர் என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராஜ்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த இந்த என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story