அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: யுஜிசி பரிந்துரை
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் உட்பட 20 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த ஆண்டிற்கான 'இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ்' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்க உள்ளது.
புது டெல்லி,
சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 'இன்ஸ்டியுஷன் ஆப் எமினன்ஸ்' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்குரிய பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வழங்குகிறது.
தமிழகத்தை சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் உட்பட 20 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த ஆண்டிற்கான 'இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ்' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்க உள்ளது.
இந்த ஆண்டுக்கான சிறப்பு அந்தஸ்துக்கு ஏற்ற 20 கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. 10 மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களும் 10 தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த அந்தஸ்தை பெற உள்ளன. இதில், அரசு நடத்தும் நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம் பெறுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம், பிஹெச்யு, ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐஐடி கராக்பூர், ஜாமியா ஹம்தார்த் பல்கலைக்கழகம், ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், சிவ் நாடார் பல்கலைக்கழகம் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், தேஷ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் அசோகா பல்கலைக்கழகம் முதலிய முக்கியமான கல்வி நிறுவனங்கள் சில இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story