இந்திய எல்லைக்குள் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் ஊடுருவல், பாதுகாப்பு படைகள் உஷார்
இந்திய எல்லைக்குள் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் குழு ஊடுருவியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இதுபோன்ற 4 முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்தது. கெரான் செக்டாரில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் என 7 பேரை சுட்டு வீழ்த்தியது.
இதற்கிடையே பாதுகாப்பு படையின் கண்காணிப்பை மீறி எல்லையில் 5 பேர் கொண்ட ஜெய்ஷ் பயங்கரவாத குழு ஊடுருவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story