உ.பி.யில் 10 பழங்குடியினர் கொல்லப்பட்ட விவகாரம்: கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நீக்கம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு


உ.பி.யில் 10 பழங்குடியினர் கொல்லப்பட்ட விவகாரம்: கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நீக்கம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 9:37 PM GMT (Updated: 4 Aug 2019 9:37 PM GMT)

உத்திரபிரதேசத்தில் 10 பழங்குடியினர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நீக்கம் செய்வதாக யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில், கடந்த மாதம், நிலப்பிரச்சினை காரணமாக, பழங்குடியின மக்கள் மீது கிராம தலைவரின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கூடுதல் தலைமைச் செயலாளர் நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சோன்பத்ரா மாவட்ட கலெக்டர் அங்கித் குமார் அகர்வால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சல்மான்தாஜ் பட்டீல் ஆகியோர் உடனடியாக நீக்கப்படுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்தார். இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story