ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு; மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு


ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு; மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 6:28 AM GMT (Updated: 5 Aug 2019 6:28 AM GMT)

ஜம்மு காஷ்மீரை 2 யூனியன்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநிலங்களவையில் அமித் ஷா அறிவித்தார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை அமித்ஷா அறிவித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

தொடர்ந்து பேசிய அமித்ஷா,

ஜம்மு கஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்  என  இரண்டு யூனியன்களாக  உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத  யூனியன் பிரதேசமாக லடாக்  செயல்படும் என அறிவித்தார்.

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

Next Story