காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இனிப்பு வழங்கி கொண்டாடிய சிவசேனா கட்சியினர் !


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:  இனிப்பு வழங்கி கொண்டாடிய சிவசேனா கட்சியினர் !
x
தினத்தந்தி 5 Aug 2019 3:07 PM IST (Updated: 5 Aug 2019 3:07 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சிவசேனா கட்சி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறது.

மும்பை,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு இன்று நீக்கியது.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சிவசேனா கட்சி வரவேற்றுள்ளது. மத்திய அரசின்  முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

Next Story