பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி வலியுறுத்தல்


பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும்  - சுப்பிரமணிய சாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2019 9:07 PM IST (Updated: 5 Aug 2019 9:07 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார்.



பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்து மாநிலங்களவையில் பேசினார். சுப்பிரமணிய சாமி பேசுகையில்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலேயே நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இந்த அரசின் அடுத்த திட்டமாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பிரதமரும், உள்துறை மந்திரியும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார். இனி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒன்றுமில்லை. தங்களிடம் வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கூறுவதை தவிர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மத்தியஸ்தம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார் சுப்பிரமணிய சாமி.


Next Story