உன்னாவ் விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கற்பழித்ததாக, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும், வக்கீலும் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இது விபத்து அல்ல, எனது குடும்பத்தை அழிக்க செய்த சதி என்று அந்த சிறுமியின் தாயார் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் குப்தா, அந்த சிறுமியையும், வக்கீலையும் உத்தரபிரதேசத்தில் இருந்து விமானத்தில் அழைத்து வந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே சீதாபூர் சிறையில் இருந்து வரும் குல்தீப்சிங் செங்காரை, திகார் சிறைக்கு மாற்றுமாறு கற்பழிப்பு வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story