கார் மோதி பத்திரிகையாளர் பலி: கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்
கார் மோதி பத்திரிகையாளர் பலியான விபத்து தொடர்பாக, கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்,
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீராம் வெங்கிடராமன் (வயது 33) கேரள மாநில சர்வே துறை இயக்குனராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் அருங்காட்சியக சாலையில் ஒரு சொகுசு காரில் மது போதையில் வேகமாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் (35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த ஸ்ரீராம் வெங்கிடராமன் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story