தொழிலாளியின் வயிற்றில் இருந்து 111 ஆணிகள் அகற்றம்
தொழிலாளியின் வயிற்றில் இருந்து 111 ஆணிகள் அகற்றப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவரது வயிற்றில் இருந்து 111 ஆணிகளை டாக்டர்கள் அகற்றினார்கள்.
வயிற்றில் ஆணிகள் எப்படி வந்தது? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கேட்டனர். கூலி தொழிலாளியாக பணியாற்றியபோது சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அப்போது சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை எடுத்து விழுங்கி உள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story