காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்புகளுடன் ராணுவ உயர்அதிகாரி ஆலோசனை
காஷ்மீரில் உளவு, பாதுகாப்பு அமைப்புகளுடன் ராணுவ உயர்அதிகாரி ஆலோசனை நடத்தினார். எதிரிகளை முறியடிக்க படைகள் தயார்நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
ஜம்மு,
காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஸ்ரீநகரில் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பீர் சிங் தலைமை தாங்கினார். அதில், உயர் ராணுவ, போலீஸ் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எதிரிகளின் எத்தகைய சதியையும் முறியடிக்க படைகள் தயார்நிலையில் இருப்பதாக அவர் உறுதிபட தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:-
காஷ்மீரில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, பயங்கரவாதிகளின் பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தி இருக்கிறது. பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து வருகிறது. எல்லையில் போர்நிறுத்த விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் அவதூறு பிரசாரத்தை தொடங்க சமூக வலைத்தளங் களை பயன்படுத்துகிறது.
அதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து வருகிறது. பாகிஸ்தானின் பொய் பிரசாரத்துக்கு மக்கள் பலியாக வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகள், சிறிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Related Tags :
Next Story