ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல் அமைச்சர்களை இழந்துள்ள டெல்லி


ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல் அமைச்சர்களை இழந்துள்ள டெல்லி
x
தினத்தந்தி 7 Aug 2019 6:49 AM IST (Updated: 7 Aug 2019 2:07 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தலைநகர் டெல்லி கடந்த ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல் அமைச்சர்களை இழந்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.  அவருக்கு வயது 67.

7 முறை மத்திய மந்திரியாக இருந்துள்ள அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் 2வது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர்.  டெல்லியின் முதல் அமைச்சராக கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருந்தவர்.

இதேபோன்று இந்த வருடம் ஜூலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித் மாரடைப்பினால் காலமானார்.  அவர் 3 முறை முதல் அமைச்சராக பதவி வகித்தவர்.

கடந்த ஒரு மாதத்திற்குள் தீட்சித் மற்றும் சுவராஜ் மரணமடைந்து உள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபரில், மதன் லால் குரானா காலமானார்.  இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.  கடந்த ஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல் அமைச்சர்கள் மரணமடைந்து உள்ளனர்.

Next Story