சுஷ்மா சுவராஜ் மறைவு மிகவும் கவலையளிக்கிறது - ஜப்பான் தூதர்
சுஷ்மா சுவராஜ் மறைவு மிகவும் கவலையளிக்கிறது என ஜப்பான் தூதர் கூறியுள்ளார்.
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பல்வேறு நாட்டு அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிற்கான ஜப்பான் தூதரான கென்ஜி ஹிராமாத்சு சுஷ்மாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சுஷ்மா சுவராஜ் மறைவு தொடர்பான செய்தியால் மிகவும் கவலையடைந்தேன். ஜப்பான் அரசு மற்றும் மக்களின் சார்பில், சுஷ்மாவின் உறவினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story