தேசிய செய்திகள்

காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் - அஸ்லாம் சேர் கான் + "||" + Cong got 12 cr votes can catch up with BJP Aslam Sher Khan

காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் - அஸ்லாம் சேர் கான்

காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் -  அஸ்லாம் சேர் கான்
காங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் கூறியுள்ளார்.
2019 தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரசில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகிறது. தலைமையில்லாத காரணத்தினால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் மாறுபட்ட நிலைப்பாடு கட்சிக்குள் காணப்பட்டது. தேர்தல்களில் எல்லாம் பா.ஜனதாவே வெற்றி கொடியை நாட்டிவரும் நிலையில், காங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 முன்னாள் ஹாக்கி வீரரான அஸ்லாம்  சேர் கான் பேசுகையில், “காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது. 23 கோடி மக்கள் பா.ஜனதாவிற்கு வாக்களித்தாலும் 12 கோடி மக்கள் நம்பிக்கையை காங்கிரசிடம் வைத்துள்ளனர். சோம்பேறியாக இருப்பதைவிட புதியதாக ஸ்திரமான பணியை தொடங்க வேண்டும். தடையாக எழுந்துள்ள பணிகளை சவாலாக கொண்டு பணியாற்ற வேண்டும். இது ஒரு பெரிய சவால் என்றாலும், கடினமான பணியென சொல்லிவிடமுடியாது. திறமையாக செயல்பட்டு மக்களை நாட வேண்டும், காங்கிரஸ் கடுமையாக உழைத்திருந்தால், இந்த 12 கோடி வாக்கை 25 கோடியாக மாற்றியிருக்கலாம். காங்கிரஸ் ஸ்திரமாக, நம்பிக்கையுடன் செயல்பட்டால்  பா.ஜனதாவை தோற்கடிக்கலாம்,” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்
அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய மோடி அமெரிக்கா செல்லவில்லை என பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
3. ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
4. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
5. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்
மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.