வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துமாறு எடியூரப்பாவிற்கு அமித்ஷா அறிவுறுத்தல்


வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துமாறு எடியூரப்பாவிற்கு அமித்ஷா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2019 8:49 PM IST (Updated: 7 Aug 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

பிரதமரை இன்று சந்தித்து மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேச இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது திட்டத்தை ரத்து செய்து பெங்களூரு திரும்பினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமித்ஷா கேட்டுக்கொண்டதையடுத்து, பிரதமரை இன்று சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்துப் பேச இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது திட்டத்தை ரத்து செய்து பெங்களூரு திரும்பினார்.

இதுகுறித்து எடியூரப்பா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “ இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை நான் சந்திக்க இருந்தேன். ஆனால் அமித்ஷா என்னிடம் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்” என்றார்.

டெல்லியில் சில மத்திய அமைச்சர்களை நேற்று சந்தித்த எடியூரப்பா அவர்களிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார். அமித்ஷாவை இன்று சந்தித்த அவர், பின்னர் பெங்களூரு திரும்பினார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். 

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க மீண்டும் டெல்லி செல்வதாக அவர் தெரிவித்தார்.

Next Story