அபிநந்தன் வர்தமான் மற்றும் 5 பலாகோட் விமானிகளுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருது?
அபிநந்தன் வர்தமான் மற்றும் 5 பலாகோட் விமானிகளுக்கு ராணுவத்தின் மிக உயர்ந்த விருது வழங்கப்படுகிறது.
புதுடெல்லி
கடந்த மே 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிருஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் வீரம் நாடு முழுவதும் பேசப்பட்டது.
அபிநந்தன் வர்தமானின் சாகசத்திற்காக அவருக்கு வீர் சக்ரா வழங்கப்படலாம், மேலும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாத முகாம் மீது குண்டுகளை வீசிய ஐந்து மிராஜ் -2000 போர் விமான விமானிகள் துணிச்சலுக்கான வாயு சேனா பதக்கம் வழங்கப்படும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story