முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 8 Aug 2019 6:16 PM IST (Updated: 8 Aug 2019 6:16 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கப்பட்டது.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தார். இதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி  கவுரவித்தார். இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Next Story