3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான் - பிரதமர் மோடி


3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 Aug 2019 8:36 PM IST (Updated: 8 Aug 2019 8:36 PM IST)
t-max-icont-min-icon

3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் பற்றிய அறிவிப்பு வெளியானநிலையில்,  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மோடி கூறியதன் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

* தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. 

* உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 

*காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் 

* காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும்

* ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிகமானதே. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். 

* உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 

* ஐஐடி,  எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் தொடங்கப்படும்.

*காஷ்மீர் மக்களின் உரிமை நிலை நாட்டப்படும்: அது என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும். 

*ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். 

*விமான நிலைய உருவாக்கம்,  தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும். 

பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்புக்காக பெருமளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். 

*ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

*1947-க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. இங்கு மட்டும் கிடைக்கவில்லை

*காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம். 

*காஷ்மீர் மக்களுக்கு இனி வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். 

*குழந்தைகள், பெண்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கும்

*370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பட்டியல், பழங்குடியின மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும்.

*ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்.

* காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதத்தை தோற்கடிப்பார்கள்.

* மிக விரைவாக லடாக்கில் வளர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.


Next Story