காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உடன்நிற்போம் - பிரதமர் மோடி உறுதி
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டசபை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபையில்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் மாநிலம் பிரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி அப்போது குறிப்பிடுகையில், “இந்திய மக்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் அது நமக்கான பிரச்சினையாகும். நாம் எப்போதும் அவர்களுடன் இருப்போம். அவர்களுடைய மகிழ்ச்சியான தருணம் மற்றும் சோகமான தருணம் என எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்” எனக் கூறியுள்ளார். பக்ரீத் திருநாள் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பண்டிகையை கொண்டாட காஷ்மீர் மாநில மக்களுக்கு எந்தஒரு பிரச்சினையும் இருக்காது. ஜம்மு காஷ்மீருக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்பும் அம்மாநில மக்களுக்கு உதவியை செய்வோம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story