சுஷ்மா சுவராஜ் அஸ்தி கங்கை ஆற்றில் கரைப்பு
மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அஸ்தியை அவரது மகள் கங்கை ஆற்றில் கரைத்தார்.
ஆக்ரா,
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் 6-ம் தேதி இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் லோதி சாலை சுடுகாட்டில் நடந்த இறுதிச்சடங்குகளில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பூடான் மன்னர் ஷெரிங் டோப்கே, அத்வானி, பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் மின்சார சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் சுஷ்மா சுவராஜின் அஸ்தியை அவரது ஒரே மகளான பன்சூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் பன்சூரி தனது தாய் சுஷ்மா சுவராஜ் அஸ்தியை உத்தர பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள கங்கை ஆற்றில் இறுதி மரியாதை செய்து அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்தார்.
Related Tags :
Next Story