கொச்சி விமான நிலையம் 11 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு


கொச்சி விமான நிலையம் 11 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 7:36 AM IST (Updated: 9 Aug 2019 7:36 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் 11 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி, 

தென்மேற்கு பருவ  மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது.  மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  

வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்படி என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 40 -பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, திரிசூர், பாலக்காடு, கன்னூர், காசர்கோடு, ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை நீடித்து வருவதால், கொச்சி விமான நிலையம் வரும் 11 ஆம் தேதி 3 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பெரியார் ஆறு மற்றும் கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான  நிலையம் மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Next Story