கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சிலநாட்களாக பெய்யும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தில் மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் நிலவுகிறது. மழை தொடரும் நிலையில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆழப்புலா, கோட்டயம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story