காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 9 Aug 2019 12:57 PM GMT (Updated: 9 Aug 2019 12:57 PM GMT)

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இவ்விவகாரத்தில் தலைமையில்லாத காங்கிரஸ் கட்சியில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருதரப்பினர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்தனர். திங்கள் கிழமை இதுதொடர்பான மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் கட்சியின் கொறடா புவனேஸ்வர் காலிட்டா ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தற்கொலை செய்கிறது என விமர்சனம் செய்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தார். 

தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார். அவர் பா.ஜனதாவில் இணையலாம் என செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். 


Next Story